உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

எட்டையாபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்து: 4 பேர் உயிர் தப்பினர்

தூத்துக்குடி: மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (57). குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி செய்து வருகிறார். இன்று தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு குடிநீர் பைப் லைன் அமைக்கும் பணி ஒப்பந்தம் தொடர்பாக மதுரையிலிருந்து தூத்துக்குடிக்கு , நண்பர்கள் சேலத்தைச் சேர்ந்த சரவணகுமார் (38), ரவி(53) மற்றும் மதுரையைச் சேர்ந்த முகமது யாசின் ஆகிய ட 4 பேரும் காரில் வந்துள்ளனர். ரவிச்சந்திரன் காரை ஓட்டி சென்றுள்ளார். எட்டையாபுரம் அருகே தாப்பாத்தி தேசிய நெடுஞ்சாலையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் 4 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு எட்டையபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி