உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் அர்ச்சகருக்கு அடி தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு

திருச்செந்துார் அர்ச்சகருக்கு அடி தி.மு.க., கவுன்சிலர் மீது வழக்கு

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் அர்ச்சகர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக, தி.மு.க., கவுன்சிலர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.திருச்செந்துார், அக்ரஹாரம் இரண்டாவது சன்னிதி தெருவை சேர்ந்தவர் கார்த்திக், 44; சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அர்ச்சகராக உள்ளார். பக்கத்து வீட்டில் நகராட்சி 22வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் முத்துகிருஷ்ணன், 38, வசிக்கிறார். அவர்கள் வீட்டில் உள்ள ஏசி.,யில் இருந்து வெளியாகும் தண்ணீர், கார்த்திக் வீட்டிற்குள் சென்றுள்ளது.இது தொடர்பாக, இரு வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே பிரச்னை இருந்து வந்தது. நேற்று முன்தினம் முத்துகிருஷ்ண னும், அவரது தந்தை பாலனும் சேர்ந்து கார்த்திக் வீட்டில் இருந்த ஏசி அவுட்டோர் மிஷினை சேதப்படுத்தியுள்ளனர்.தட்டிக்கேட்ட கார்த்திக், அவரது மனைவி வள்ளியை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். காயமடைந்த கார்த்திக்கும், அவரது மனைவியும் திருச்செந்துார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் புகாரில், முத்துகிருஷ்ணன் மீது திருச்செந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை