உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோவில் பற்றி அவதுாறு: மூவர் மீது வழக்கு

திருச்செந்துார் கோவில் பற்றி அவதுாறு: மூவர் மீது வழக்கு

துாத்துக்குடி:திருச்செந்துார் கோவில் குறித்து, சமூக வலைதளங்களில் அவதுாறு பரப்பியதாக மூவரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர். திருச்செந்துார் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்தும், பணம் வாங்கிக் கொண்டு பக்தர்களை கோவிலுக்குள் சிலர் அனுமதிப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிடப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, கோவில் உள்துறை கண்காணிப்பாளர் ராமமூர்த்தி, திருச்செந்துார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர், 'திருச்செந்துாரை சேர்ந்த மணிகண்டன், 24, பிரித்திவிராஜ், 49, செந்தில்குமார், 34, ஆகியோர், 16ம் தேதி, 1,000 பக்தர்களுடன் சண்முகர் விலாசம் கேட்டை உடைத்து கோவில் வளாகத்தின் உள்ளே நுழைந்தனர். தொடர்ந்து, கோவில் நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசுக்கு எதிராகவும் சமூக வலை தளங்களில் பொய்யான தகவல்களை, மணிகண்டன் பரப்பி வருகிறார். 'பக்தர்களிடையே பகையை துாண்டி, சட்டவிரோதமாக கூடி கலவரம் ஏற்படுத்தி, கோவில் சொத்துக்களை சேதப்படுத்தி வரும் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்திருந்தார். இது தொடர்பாக, விசாரணை நடத்திய திருச்செந்துார் கோவில் போலீசார், பிரித்திவிராஜ், மணிகண்டன், செந்தில்குமார் ஆகிய மூவர் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை