உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கடல் அலையில் சிக்கிய சென்னை பெண் மீட்பு

திருச்செந்துார் கடல் அலையில் சிக்கிய சென்னை பெண் மீட்பு

துாத்துக்குடி:திருச்செந்துார் கடலில், ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட பெண் பக்தர், பத்திரமாக மீட்கப்பட்டார். பவுர்ணமி தினம் மற்றும் விடுமுறை நாள் என்பதால் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று பக்தர்களின் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது. கடலில் ஏராளமான பக்தர்கள் திரண்டனர். சென்னை, மூலக்கடையை சேர்ந்த உமாபதி மனைவி பத்மாவதி, 55, புனித நீராடியபோது, கடல் அலையின் சீற்றத்தால், காலில் அடிபட்டது. நிற்க முடியாமல் திணறியவரை , அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது. அங்கிருந்த பக்தர்கள் கூச்சலிட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலர் முத்துக்கனி, கோவில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள் உடனடியாக அவரை மீட்டனர். நடக்க முடியாமல் தவித்த பத்மாவதி, கோவில் இலவச ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை