உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.20க்கு சிக்கன் பிரியாணி; ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு

ரூ.20க்கு சிக்கன் பிரியாணி; ஆய்வுக்கு கலெக்டர் உத்தரவு

துாத்துக்குடி: துாத்துக்குடி நகரின் பல்வேறு இடங்களில் சிக்கன் பிரியாணி, 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சமீபத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில், கூட்டாம்புளியைச் சேர்ந்த தி.மு.க., விவசாய அணி அமைப்பாளர் சுரேஷ் இது குறித்து கேள்வி எழுப்பினார்.அவர், '20 ரூபாய்க்கு சிக்கன் பிரியாணி விற்பது நடைமுறையில் சாத்தியமில்லை. மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அதன் தரம் இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு துறை ஆய்வு செய்ய வேண்டும்' என, கோரிக்கை வைத்தார். கலெக்டர் இளம்பகவத், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளிடம் விபரங்களை கேட்டறிந்தார். 20 ரூபாய் பிரியாணியின் தரத்தை ஆய்வு செய்ய அவர் உத்தரவிட்டுள்ளார்.உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது:சில இடங்களில் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாவட்டம் முழுதும் கண்காணிக்கப்பட்டு, பிரியாணி தரம் குறித்து ஆய்வு செய்யப்படும். தரம் குறைவு மற்றும் மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

சண்முகம்
ஜன 27, 2025 23:59

ஒரு கப் குஸ்கா 20 ரூபாய். என்ன ப்ராப்ளம்?


சி எம் ஆர்
ஜன 27, 2025 23:27

அப்பவும் திமுக காரன் ஓசியில் கேட்பான்


புதிய வீடியோ