கட்டட தொழிலாளி கொலை போதை நண்பர் வெறிச்செயல்
திருச்செந்துார்,;துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே அடைக்கலாபுரம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி பெல்ஜீஸ், 26. அதே பகுதியை சேர்ந்தவர் அருள் ஜென்சன், 29. நண்பர்களான இருவரும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் கொண்டவர்கள்.சில நாட்களுக்கு முன் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் அருள் ஜென்சனை, அந்தோணி பெல்ஜீஸ் தாக்கினார். பின், இருவரும் சமரசமாகி விட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இருவரும் அங்குள்ள ஒரு காட்டுப்பகுதிக்கு சென்று மது குடித்தனர். மீண்டும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டதால், அந்தோணி பெல்ஜீஸை கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு, அருள் ஜென்சன் தப்பினார்.திருச்செந்துார் தாலுகா போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, போலீசார் தேடுவதை அறிந்ததும் அருள் ஜென்சன் நேற்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.