உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அதிகாரிகள் ஆடு, மாடு மேய்க்க செல்லுங்கள் பி.டி.ஓ.,வை வறுத்தெடுத்த தி.மு.க., நிர்வாகி

அதிகாரிகள் ஆடு, மாடு மேய்க்க செல்லுங்கள் பி.டி.ஓ.,வை வறுத்தெடுத்த தி.மு.க., நிர்வாகி

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் யூனியன், கோமநேரி பஞ்சாயத்திற்குட்பட்ட கூவைகிணறு பகுதியில் பாலம் அமைக்க, அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். நிதி ஆதாரம் இல்லாததால், பாலம் கட்டப்படவில்லை.இந்நிலையில், கோமநேரியில் நேற்று முன்தினம் நடந்த கிராம சபை கூட்டத்தில், பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்காத கலெக்டருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற, அப்பகுதி மக்கள் சிலர் கையெழுத்திட்டனர்.இது தொடர்பாக, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் ப்ரெனிலாவின் கணவர் போனிபாஸ், சாத்தான்குளம் பி.டி.ஓ., சுடலையிடம் பேசிய ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.ஆடியோவில் போனிபாஸ் பேசியிருப்பதாவது:ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தில் கூவைகிணறு சாலை துண்டிக்கப்பட்டு, வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்து வருகிறது. புதிய பாலம் கட்ட கோரி, 10 ஆண்டுகளுக்கு மேலாக கலெக்டர், எம்.எல்.ஏ.,விடம் மனு கொடுத்துள்ளோம்.நபார்டு வாயிலாக நிதி பெற்று பாலம் கட்டப்படும் என, மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக கூறி வருகிறீர்கள். இதுவரை எந்த பணியும் செய்யவில்லை. 200க்கும் மேற்பட்ட முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பாலத்தை கட்டித்தர கலெக்டரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என்றால், அவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, வேறு வேலைக்கு செல்ல வேண்டியதுதானே?பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதி என்பதால் பாலம் கட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க மாட்டாரா? ஒவ்வொரு மழை பாதிப்பின் போதும் அதிகாரிகள் பொய் சொல்லி மக்களை ஏமாற்றுகின்றனர்.பாலம் கட்ட, 15 ஆண்டுகளுக்கும் மேலாக மனு கொடுத்தும் ஒரு கலெக்டர் கூட நடவடிக்கை எடுக்கவில்லை. எஸ்.சி., மக்கள் பாதிக்க வேண்டும் என கலெக்டர் நினைக்கிறாரா? பாலம் கட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்பதற்காக, அவர் சரியாக வேலை செய்யவில்லை என, கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வருகிறோம்.ஒரு திராணியற்ற கலெக்டராக அவர் இருக்கிறார் என்பதால் தான், தீர்மானம் கொண்டு வருகிறோம். ஆனால், அதிகாரிகள் அதை நிறைவேற்றித் தர மறுக்கின்றனர். மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று கலெக்டர் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார்.பாலம் கட்டித் தராத அதிகாரிகள் வேலையைவிட்டு, வேறு வேலைக்கு செல்லுங்கள். ஆடு, மாடு மேய்க்கச் செல்லுங்கள். பால் உற்பத்தி செய்யுங்கள். மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக் கொண்டு, மக்களுக்கு ஏதும் செய்யாமல் ஏன் பதவியில் இருக்கிறீர்கள்?இவ்வாறு அவர் ஆடியோவில் பேசி உள்ளார்.இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ