உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அங்கீகாரமற்ற சர்ச் வளாகத்தை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அங்கீகாரமற்ற சர்ச் வளாகத்தை மூட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

மதுரை,:துாத்துக்குடி மாவட்டம் மெஞ்ஞானபுரத்தில், அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச் கட்டட வளாகத்தை மூட, கலெக்டருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.திருச்செந்துார், செம்மறிக்குளம் தனராஜ் என்பவர் தாக்கல் செய்த மனு:மெஞ்ஞானபுரம் மற்றும்மாணிக்கபுரத்தில் சி.எஸ்.ஐ., சர்ச் கட்டுமானம் மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு, கட்டட திட்ட வரைபட அனுமதி பெறவில்லை. பொது சாலையை ஆக்கிரமித்து, விதிமீறி கட்டுமானம் மேற்கொள்வதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.எனினும், கட்டுமானம் தொடர்கிறது. கட்டுமானத்தை அகற்றக்கோரி அனுப்பிய மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு குறிப்பிட்டார்.முன்னர் நடந்த விசாரணையின் போது, துாத்துக்குடி தலைமை நீதித்துறை நடுவர், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து, கட்டுமானத்தின் தற்போதைய நிலை குறித்து அக்., 4க்குள் அறிக்கை தாக்கல் செய்ய, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.இந்நிலையில், நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு உத்தரவிட்டதாவது:எவ்வித அனுமதியும் இன்றி சர்ச் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பணி முடிந்து ஒரு மாதமாகிறது என, விசாரித்த நீதிபதி அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனக்குறைவாக செயல்பட்டு கடமை தவறியுள்ளனர்.அவர்கள் மீதும், சர்ச் கட்டட வளாகத்தை உடனடியாக மூடவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வளாகத்தை யாரும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது.இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ