போக்சோவில் வாலிபருக்கு வாழ்நாள் சிறை தண்டனை
துாத்துக்குடி,:போக்சோ வழக்கில் கைதான வாலிபர் வாழ்நாள் முழுதும் சிறையில் இருக்க நீதிபதி உத்தரவிட்டார்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகா, ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த முருகன், 37, கடந்த 2022ல் அப்பகுதியில் 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்தார். ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோவில் முருகனை கைது செய்தனர்.துாத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேஷ், முருகனுக்கு வாழ்நாள் சிறை தண்டனை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார்.