உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை

 மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் தாய் தற்கொலை

துாத்துக்குடி: சிறையில் உள்ள மகனை ஜாமினில் எடுக்க முடியாததால் மனமுடைந்த தாய், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். துாத்துக்குடி லுார்தம்மாள்புரத்தை சேர்ந்த ஸ்டீபன் மனைவி விமலாராணி, 45. மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தார். இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஸ்டீபன் சில ஆண்டுகளுக்கு முன் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் மூத்த மகன் மரிய டினோ, ஒரு கொலை வழக்கில் சில மாதங்களுக்கு முன் கைதாகி, பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரை ஜாமினில் எடுக்க விமலாராணி பல முறை முயற்சி செய்தார். முடியாததால் மனமுடைந்த விமலாராணி, நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாளமுத்துநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை