உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

நாழி கிணறு புதுப்பிப்பு பணி புனித நீராட மாற்று ஏற்பாடு

துாத்துக்குடி: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடிய பின், கடற்கரையோரம் உள்ள நாழி கிணறு புனித தீர்த்தத்தில் நீராடிய பிறகே முருகனை தரிசனம் செய்வது வழக்கம். மிகவும் பழமைவாய்ந்த அந்த நாழி கிணறு புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது.இதனால், நாழி கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் தீர்த்த தொட்டியில் நிரப்பி, பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.இதற்கு பக்தர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோவில் நிர்வாகம் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.கோவில் முன்புள்ள நாழிகிணறு நேற்று முதல் மூடப்பட்டுள்ளது.அதை தொடர்ந்து பக்தர்களின் வசதிக்காக மின் மோட்டார் மூலம் நாழி கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, வெளியே உள்ள தொட்டியில் நிரப்பி வைக்கப்படுகிறது.கோவில் பணியாளர்கள் மூலம் பக்தர்கள் வாளியில் தீர்த்தத்தை சேகரித்து நீராடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை