உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாணவியரிடம் அத்துமீறல் உடற்கல்வி ஆசிரியர் கைது

மாணவியரிடம் அத்துமீறல் உடற்கல்வி ஆசிரியர் கைது

உடன்குடி : துாத்துக்குடி மாவட்டம் உடன்குடி சல்மா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 500 மாணவ -- மாணவியர் படிக்கின்றனர். கடந்த மாதம் 22ல், துாத்துக்குடியில் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் சல்மா பள்ளியில் இருந்து ஐந்து மாணவியரை உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங் என்பவர் அழைத்து சென்றார். மறுநாளும் போட்டி நடந்ததால், இரவு அங்குள்ள அறையில் தங்கி இருந்தனர்.அப்போது மாணவியருக்கு மது கொடுத்த உடற்கல்வி ஆசிரியர் பொன்சிங், பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றார். மேலும் இதுகுறித்து பெற்றோரிடம் கூறக்கூடாது எனவும் மிரட்டினார். இதனால் மாணவியர் தங்களுக்கு நடந்த அராஜகம் பற்றி வீட்டில் தெரிவிக்கவில்லை.இதை தாமதமாக அறிந்த பெற்றோர், நேற்று சல்மா மெட்ரிக் பள்ளியை முற்றுகையிட்டனர். கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் விசாரணை நடத்தினர். கோவையில் உறவினர் வீட்டில் தலைமறைவாக இருந்த உடற்கல்வி ஆசிரியர் பொன் சிங்கை கோவை போலீசார் உதவியுடன், உடன்குடி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் திருச்செந்துார் அழைத்து வரப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி