உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்

திருச்செந்துாரில் தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகள்

துாத்துக்குடி:திருச்செந்துார் கடற்கரையில் தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால், பல்வேறு ஆபத்துகள் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடற்கரையில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்வது வழக்கம். நீராடும் பக்தர்கள் சிலர் பரிகாரமாக நினைத்து அணிந்திருந்த உடைகளை கடலில் கழற்றி விடுவதால், ஆங்காங்கே கழிவு துணிகள் தேங்கி கிடக்கின்றன.இதேபோல, பக்தர்கள் கொண்டு வரும் பிளாஸ்டிக் பைகளை கடற்க ரையில் வீசும் நிலை உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. கடல் பொருட்களை மீண்டும் கரைக்கு கொண்டு சேர்ப்பதால் பிளாஸ்டிக் பைகளும் குவிந்து கிடக்கிறது.கடற்கரையோரம் உள்ள பாறைகளிலும் பிளாஸ்டிக் கழிவுகள் மாட்டிக் கொண்டு அங்கு நீராடும் பக்தர்களின் காலில் சிக்கி ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. கடல் வாழ் உயிரினங்களும் பிளாஸ்டிக் கழிவுகளால் பாதிக்கப்படுகிறது. புனித நீராடும் பக்தர்கள் கடற்கரை மற்றும் கடலில் பிளாஸ்டிக் பைகளை போடுவதை தடுக்கவும், பக்தர்களுக்கு தேவைப்படுவதாக கூறி பிளாஸ்டிக் பைகளை கடற்கரையில் விற்பனை செய்வதையும் கோயில் நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை