உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அவதுாறு பரப்பியவர் வீட்டை அதிகாலை தட்டிய போலீசார்

அவதுாறு பரப்பியவர் வீட்டை அதிகாலை தட்டிய போலீசார்

திருச்செந்துார் : திருச்செந்துார் கோவில் அதிகாரிகள் குறித்து அவதுாறு கருத்துகளை பதிவு செய்த சமூக ஆர்வலரை, போலீசார் கைது செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்செந்துார், காமராஜ் சாலையை சேர்ந்தவர் பிரித்திவிராஜ், 50; பா.ஜ., முன்னாள் நிர்வாகியான இவர், பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். 'உங்களின் ஒருவன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். சமூக பிரச்னைகள், கோவிலில் உள்ள அடிப்படை வசதிகள் பிரச்னை குறித்து அவர் அடிக்கடி வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துவார்.நேற்று முன்தினம் அதிகாலை 4:00 மணிக்கு, திருச்செந்துார் கோவில் போலீசார் அவரது வீட்டுக்கு சென்று, அவர் மீதுள்ள வழக்கு குறித்து விசாரிக்க அழைத்துச் செல்ல வந்திருப்பதாக கூறியுள்ளனர். 'வீட்டில் பிரித்திவிராஜ் இல்லை' என கூறிய அவரது குடும்பத்தினர், கதவை திறக்காமல் போலீசாரை திருப்பி அனுப்பினர். இது தொடர்பாக, போலீசாருக்கும், பிரித்திவிராஜ் குடும்பத்தினருக்கும் வாக்குவாதம் நடந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. வழக்கு தொடர்பாக எந்தவித ஆவணங்களும் இல்லாமல், அதிகாலை நேரத்தில் போலீசார் அத்துமீறி, பிரித்திவிராஜை கைது செய்ய முயன்றதாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ