உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடியில் கைதி ஓட்டம்

துாத்துக்குடியில் கைதி ஓட்டம்

துாத்துக்குடி:நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு சிறைக்கு அழைத்து வரப்பட்ட கைதி போலீசார் பிடியிலிருந்து தப்பி ஓடினார்.துாத்துக்குடி சுந்தரவேல்புரத்தை சேர்ந்தவர் ஐகோர்ட் மகாராஜன் 30. பல்வேறு வழக்குகளில் தொடர்புடையவர். அண்மையில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விளாத்திகுளத்தில் கொலை முயற்சி வழக்கில் கைதானார். அந்த வழக்கில் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திபடுத்தி விட்டு போலீசார் அவரை துாத்துக்குடி சிறைக்கு அழைத்து வந்தனர்.பஸ்சில் வந்த அவர் தூத்துக்குடி புது பஸ் ஸ்டாண்ட் அருகே வந்த பொது போலீசாரின் பிடியில் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார். போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி