வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஸ்விம்மிங் இஸ் a good exercise.
துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டார பகுதியில், கடந்த சில தினங்களாக பரவலான மழை பெய்கிறது. தொடர் மழை காரணமாக, கடம்பூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ரயில்வே சுரங்க பால பகுதியில், மழை நீர் கழுத்தளவிற்கு தேங்கியுள்ளது. ஏற்கனவே அப்பகுதி மக்கள் அந்த இடத்தில், 'ரயில்வே சுரங்க பாலத்திற்கு பதில், மேம்பாலம் அமைக்க வேண்டும்' என போராட்டங்களை நடத்தினர். அதையும் மீறி, ரயில்வே சுரங்க பாலம் அமைக்கப்பட்டது.தற்போது, மழைநீர் வெளியேற வழியில்லாமல், ரயில்வே சுரங்கப் பாலத்தில் கழுத்தளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், அப்பகுதியை சேர்ந்த சிலர், எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில், தேங்கி நின்ற மழை நீரில் நீச்சல் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்விம்மிங் இஸ் a good exercise.