உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.1 கோடி பீடி இலை பறிமுதல்

ரூ.1 கோடி பீடி இலை பறிமுதல்

துாத்துக்குடி : திருச்செந்துார் கடற்கரை பகுதியில் இலங்கைக்கு படகில் கடத்த இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்பிலான பீடி இலை மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே ஆலந்தலை கடற்கரை பகுதியில் கியூ பிரிவு போலீசார் நேற்று அதிகாலை ரோந்து சென்றபோது, இலங்கைக்கு கடத்துவதற்காக, 'ஈச்சர்' வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த 82 மூட்டைகளில் இருந்த, 2,460 கிலோ பீடி இலையை பறிமுதல் செய்தனர்.அங்கு, போலீசாரை கண்டதும், கடத்தல் கும்பல் படகில் தப்பியோடியது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வேன், இரு பைக்குகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு, 1 கோடி ரூபாய். இதுகுறித்து போலீசார் மேலும் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை