உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்

ரூ.30 கோடி போதை பொருள் பறிமுதல்

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு வடக்கு தெருவில் உள்ள துரைபாண்டியன், 48, என்பவரது வீட்டில், நேற்று அதிகாலை போதைப் பொருட்கள் தடுப்பு போலீசார் திடீரென சோதனை நடத்தினர். இரண்டு பைகளில் இருந்த போதைப் பொருட்களை கைப்பற்றினர்.'சரஸ்' என அழைக்கப்படும் போதைப் பொருள் 50 கிலோ, 'ஐஸ்' என அழைக்கப்படும் மெத்தாம்பெட்டமைன் போதைப் பொருள் 5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டன. துரைபாண்டியனை கைது செய்த போலீசார், அவரை போதைப் பொருட்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாரிடம் ஒப்படைந்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது:அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பிடிபட்ட போதை பொருட்களின் இந்திய மதிப்பு, 30 கோடி ரூபாய். மூன்று ஆண்டுகளுக்கு முன், தாமிரபரணி ஆற்றில் பண்டல்களாக மிதந்து வந்ததை சேகரித்து வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். அவரிடம் நடத்தப்படும் விசாரணைக்கு பிறகே முழுமையான தகவல் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை