உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துாரில் கடல் சீற்றம் 2 பெண் பக்தர் கால் முறிவு

திருச்செந்துாரில் கடல் சீற்றம் 2 பெண் பக்தர் கால் முறிவு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பரவலான மழை பெய்தது. நேற்று பெய்த மழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை தண்ணீர் சூழ்ந்தது. திருச்செந்துாரில் உள்ள சாலைகளில் மழை நீரோடு பாதாள சாக்கடை நீரும் கலந்ததால் சாலைகளில் சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.இதற்கிடையே, திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன் உள்ள கடற்கரையில் நேற்று கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. அலைகளின் சீற்றம் அதிகமாக இருந்ததால் கடற்கரையில் அரிப்பு ஏற்பட்டது. இதனால் ஆங்காங்கே பாறைகள் வெளியே தெரிந்தன.கோவிலுக்கு வந்த காரைக்குடியைச் சேர்ந்த சிவகாமி, 50, என்ற பெண் பக்தர் ராட்சத அலையில் சிக்கினார். கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த கோவில் பணியாளர்கள் போராடி அவரை மீட்டனர். இருப்பினும், அவரது காலில் முறிவு ஏற்பட்டது.அதுபோல, சென்னையைச் சேர்ந்த கீர்த்தனா, 40, என்பவரும் ராட்சத அலையில் சிக்கியதால், காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்கப்பட்டு, முதலுதவிக்குப் பின் திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ