உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு

பஸ் வசதி கோரி மாணவர்கள் முறையீடு

துாத்துக்குடி; துாத்துக்குடி மாவட்டம், குறுக்குச்சாலை அருகே அமைந்துள்ள கொல்லம்பரம்பு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் குறுக்குச்சாலை அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கின்றனர்.கொல்லம்பரம்பு கிராமத்தில் இருந்து மாணவர்கள் பள்ளி செல்ல வசதியாக போதிய பஸ் வசதி இல்லை. இப்பகுதி வழியாக இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் ஜூன் 5 முதல் திடீரென நிறுத்தப்பட்டது.இந்நிலையில், பஸ் வசதி கேட்டு மாணவ - மாணவியர் சீருடையில் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். அவர்களுடன் பெற்றோர் மற்றும் ஊர் மக்கள் இருந்தனர். அவர்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில், 'பஸ் வசதி இல்லாததால், 7 கி.மீ., நடந்து பள்ளி செல்ல வேண்டியுள்ளது. ஆட்டோ, வேன் ஏற்பாடு செய்தால் மாதம் 1,000 ரூபாய் செலவாகிறது. கிராம மக்கள் அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். இதனால் நிறுத்தப்பட்ட பஸ் சேவையை மீண்டும் இயக்க வேண்டும்' என, கூறியிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை