மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:கோவில்பட்டியில் கந்து வட்டிக்கு பணம் தந்தவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட எஸ்.ஐ.,ஹரிகண்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் கந்து வட்டி காரர்கள் மீது புகார் உள்ளது. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ஆறுமுகபாண்டி என்பவர் சில தினங்களுக்கு முன்கந்துவட்டி கும்பல் மிரட்டலால் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.இதே போல இன்னொருவரை கந்துவட்டி கும்பல் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவங்களில் கந்துவட்டிக்கு தந்த கும்பலுக்கு ஆதரவாக கோவில்பட்டி மேற்கு போலீஸ் எஸ்.ஐ. ஹரிகண்ணன் அலைபேசியில் பேசும் உரையாடல் வெளியானது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த எஸ்.பி. பாலாஜி சரவணன், ஹரி கண்ணனை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025