மேலும் செய்திகள்
சி.ஐ.எஸ்.எப்., ஏட்டுக்கு கொலை மிரட்டல்
31-Oct-2024
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே சாதரக்கோன்விளை பகுதியைச் சேர்ந்த சிவன் மகள் முத்துலட்சுமி, 20. இவரது கணவர் வைரவம்புதுக்குடியைச் சேர்ந்த வெயிலுமுத்து. தீபாவளிக்கு முத்துலட்சுமி, வெயிலுமுத்துவுடன் தந்தை வீட்டுக்கு வந்தார்.நேற்று முன்தினம் அப்பகுதியில் நின்றிருந்தபோது, முத்துலட்சுமியை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கத்தியால் குத்திவிட்டு தப்பினார். இதில், முத்துலட்சுமி உயிரிழந்தார். குலசேகரன்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் கூறியதாவது:முத்துலட்சுமியின் சகோதரர் கோவிந்தனுக்கும், படுக்கப்பத்து பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் தீபாவளியின்போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக, மணிகண்டன் என்பவர் சமரசம் பேசியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் கோவிந்தனின் தந்தை சிவனை மணிகண்டன் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த கோவிந்தன், மணிகண்டனை அரிவாளால் வெட்டியதில், அவர் சிகிச்சையில் உள்ளார். சிவனும், கோவிந்தனும் கைது செய்யப்பட்டனர்.இதற்கிடையே, மணிகண்டனின் தம்பி தாஸ், 31, என்பவர் கோவிந்தனை பழிதீர்க்கும் நோக்கில், அவரது தங்கை முத்துலட்சுமியை கொலை செய்துள்ளார். அவரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீசார் கூறினர்.
31-Oct-2024