உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தூக்கு தண்டனையை ரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தூக்கு தண்டனையை ரத்து செய்ய விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி : ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி நேற்று மத்திய அரசை கண்டித்து தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களது தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் இயக்கம் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழ் இனியன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் இயக்க மாநில நிர்வாகி வெற்றிச் செல்வன் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். விடுதலை சிறுத்தை செய்தி தொடர்பாளர்கள் வன்னியரசன், சேகரன், மாநகர் மாவட்ட செயலாளர் ஆறுமுகநயினார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்டம் முழுவதும் இருந்து விடுதலை சிறுத்தைகள் நிர்வாகிள் திரளாக கலந்து கொண்டனர். கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை