உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / வி.ஏ.ஓ., உட்பட இருவர் பைக் விபத்தில் உயிரிழப்பு

வி.ஏ.ஓ., உட்பட இருவர் பைக் விபத்தில் உயிரிழப்பு

துாத்துக்குடி: சாலை தடுப்பில் பைக் மோதிய விபத்தில் வி.ஏ.ஓ., உட்பட இருவர் உயிரிழந்தனர். துாத்துக்குடி, தபால் தந்தி காலனியை சேர்ந்தவர் பேச்சிராஜா, 57; தளவாய்புரம் கிராம நிர்வாக அலுவலர். இவரது நண்பர் டூவிபுரத்தை சேர்ந்த ராமகிருஷ்ணன், 64; ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ.,வான இவருடன் நேற்று முன்தினம், பைக்கில் புதுக்கோட்டை சென்றுவிட்டு துாத்துக்குடி திரும்பிக் கொண்டிருந்தனர். பேச்சிராஜா பைக்கை ஓட்டினார். கோரம்பள்ளத்தில், புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருவதால், அணுகு சாலையில் செல்ல முயன்றனர். அப்போது திடீரென நிலை தடுமாறிய பைக் சாலை தடுப்பில் மோதியதில், துாக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயமடைந்தனர். துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். சிகிச்சை பெற்று வந்த பேச்சிராஜா நேற்று காலை உயிரிழந்தார். புதுக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை