குடியிலிருந்து மீள முடியாமல் தற்கொலை செய்த எஸ்.எஸ்.ஐ.,
துாத்துக்குடி,:குடிப் பழக்கத்திற்கு அடிமையான சிறப்பு உதவி ஆய்வாளர், மதுவில் எலி மருந்து கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.துாத்துக்குடி கோமஸ்புரம் பகுதியை சேர்ந்த கருப்பசாமி, 55, என்பவர் தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கருப்பசாமி, அதில் இருந்து மீள முடியாமல் தவித்து வந்துள்ளார்.அதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மீண்டும் மதுகுடிக்க துவங்கியதால், குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். வேலைக்கு செல்லாமல் கடந்த 10 நாட்களாக சுற்றி வந்த கருப்பசாமி, திடீரென மதுவில் எலிமருந்து பொடியை கலந்து குடித்துவிட்டார். ஆபத்தான நிலையில் துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார். தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.