உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / நாட்டு குண்டை வெடிக்க செய்து ரீல்ஸ் வெளியிட்டவருக்கு கம்பி

நாட்டு குண்டை வெடிக்க செய்து ரீல்ஸ் வெளியிட்டவருக்கு கம்பி

கோவில்பட்டி; நாட்டு வெடிகுண்டை வெடிக்க செய்து, அதை வீடியோவாக சமூக வலைதளத்தில் ரீல்ஸ் பதிவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, இலுப்பையூரணி வனப்பகுதியில் வாலிபர் ஒருவர், நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வீசி வெடிக்க செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கோவில்பட்டி கிழக்கு போலீசார், வீடியோ வெளியிட்டதாக இலுப்பையூரணி, மறவர் காலனியை சேர்ந்த குமார், 23, என்பவரை நேற்று கைது செய்தனர். அவர் மீது, 13 வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரிந்தது. இதற்கிடையே, கொலை வழக்கு உட்பட, எட்டு வழக்குகளில் தொடர்புடைய இளம் சிறார் ஒருவருக்கு ஆதரவாக, தீனா படத்தில் வரும் வசனத்துடன், ரீல்ஸ் வெளியிட்டதாக கோவில்பட்டி, மூப்பன்பட்டியை சேர்ந்த முகில்ராஜ், 20, என்பவரை பிடித்து, போலீசார் கடுமையாக எச்சரித்து, மன்னிப்பு வீடியோ பதிவு செய்ய வைத்தனர். இதேபோன்று, அரிவாளுடன் ரீல்ஸ் வெளியிட்ட நான்கு இளம் சிறார்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி