உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து கோலம் போட வந்த பெண் மரணம்

அறுந்து விழுந்த மின்கம்பியை மிதித்து கோலம் போட வந்த பெண் மரணம்

துாத்துக்குடி: துாத்துக்குடி, ஹவுசிங்போர்டை சேர்ந்தவர் ஜெயபாலன்; அரிசி வியாபாரி. இவரது மனைவி காஞ்சனா, 61. இவர்கள் வீட்டின் முன் தாழ்வாக சென்ற மின்கம்பி, நேற்று முன்தினம் இரவு அறுந்து கிடந்துள்ளது.மின்வாரியத்துக்கு தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை. நேற்று அதிகாலை, 5:45 மணிக்கு வீட்டின் முன், காஞ்சனா கோலம் போட வந்தபோது, எதிர்பாராதவிதமாக அவர் மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்தார்.உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர்கள் காஞ்சனா இறந்து விட்டதாக கூறினர். சிப்காட் போலீசார் விசாரிக்கின்றனர். காஞ்சனா இறந்த சில மணி நேரத்திற்கு பின் அங்கு சென்ற மின்வாரிய ஊழியர்கள், அறுந்து கிடந்த மின்கம்பியை சரி செய்தனர். குறித்த நேரத்தில் நடவடிக்கை எடுத்திருந்தால், உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம் என, உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி