உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / குடிபோதையில் தகராறு தொழிலாளி கொலை

குடிபோதையில் தகராறு தொழிலாளி கொலை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள அனவரதநல்லுாரை சேர்ந்தவர் மகாராஜன், 35. அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி மகன் முத்துக்குமார், 19; இருவரும் கட்டட தொழிலாளிகள். நேற்று முன்தினம் நள்ளிரவில் அங்குள்ள ரேஷன் கடை பொது இடத்தில் அமர்ந்து இருவரும் மது அருந்தினர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. முத்துக்குமார், அரிவாளால் மகாராஜனை வெட்டினார். பலத்த காயமடைந்த மகராஜன் சம்பவ இடத்திலேயே இறந்தார். முறப்பநாடு போலீசார் முத்துக்குமாரை கைது செய்தனர். இறந்த மகாராஜனுக்கு மனைவி, இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ