உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மண்சரிந்து தொழிலாளி பலி

மண்சரிந்து தொழிலாளி பலி

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் புதியம்புத்துார் அருகே மதுரை 4 வழிச்சாலை அருகில் தேசிய பேரிடர் நிதியில் மழைநீர் வடிகால் கட்டும்பணி நடக்கிறது. இதனை தனியார் ஒப்பந்த நிறுவனம் மேற்கொள்கிறது. நேற்று முன்தினம் இரவு தோண்டப்பட்ட குழிக்குள் கம்பி கட்டும்பணியில் கடலுாரை சேர்ந்த வேல்முருகன் 33, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலைச் சேர்ந்த முருகன் 42 ஆகியோர் ஈடுபட்டனர். அங்கு லாரி வந்தபோது மண் சரிந்து குழிக்குள் விழுந்தது. இதில் இருவரும் மண்ணுக்குள் சிக்கிக் கொண்டனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டனர். இதில் வேல்முருகன் இறந்தார். முருகன் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ