சார்ஜில் இருந்த இ-பைக் எரிந்து நாசம்
வாணியம்பாடி, திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஆசிரியர் நகரை சேர்ந்தவர் முனீர் அஹமத், 56. இவர், நேற்று மதியம் தன்னுடைய இ-பைக்கை, வீட்டின் போர்டிகோவில் சார்ஜிங் செய்து கொண்டிருந்தார். அப்போது, திடீரென மின்கசிவு காரணமாக இ-பைக் எரிய தொடங்கியது. அதிர்ச்சியடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன், மின் இணைப்பை துண்டித்து, உடனடியாக தண்ணீர் ஊற்றி தீயை கட்டுப்படுத்தி அணைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.