உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மக்கள் மத்தியில் பளார் இன்ஸ்., மீது காவலர் புகார்

மக்கள் மத்தியில் பளார் இன்ஸ்., மீது காவலர் புகார்

திருப்பத்துார்: திருப்பத்துார் மாவட்ட ஆயுதப்படை இரண்டாம் நிலை காவலர் வீரப்பன், 29; திருப்பத்துார் டவுனில் நேற்று முன்தினம் நடந்த விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில், ஜின்னா சாலையில் பாது-காப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.அதே பகுதியில் ஆம்பூர் டிராபிக் இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தியும் பணியில் இருந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ்காரர்களான வீரப்பன், கலைவாணன், 28, ஆகியோரை அழைத்துள்ளார்.இருவரும் சென்ற நிலையில் வீரப்பன் முதுகில், இன்ஸ்பெக்டர் அறைந்துள்ளார். அதிர்ச்சியடைந்த வீரப்பன், 'ஏன் என்னை அடித்-தீர்கள், நான் என்ன தவறு செய்தேன்' எனக்கேட்டார். அதற்கு அவர் ஆபாசமாக பேசியுள்ளார்.மக்கள் மத்தியில் நடந்ததால், அவமானமடைந்த வீரப்பன், திருப்-பத்துார் டவுன் போலீசில், சுந்தரமூர்த்தி மீது நேற்று புகாரளித்தார். இன்ஸ்பெக்டர் மீது காவலர் புகாரளித்தது, போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை