உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / சாண பவுடர் நீரை குடித்த 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

சாண பவுடர் நீரை குடித்த 4 குழந்தைகளுக்கு சிகிச்சை

திருப்பத்துார்: திருப்பத்துாரில், வீட்டு வாசலில் தெளிக்க வைத்திருந்த சாண பவுடர் கலந்த நீரை குடித்த, நான்கு குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். திருப்பத்துார், போஸ்கோ நகரைச் சேர்ந்த தொழிலாளி பிரசாந்த், 30. இவரது மனைவி சுபா, 28. இவர்கள் குழந்தை சான்சியாஸ்ரீ, 4, டஷ்வந்த், 2; பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழிலாளி காளியப்பன், 32. இவரது மனைவி சவுந்தர்யா, 30. இவர்களின் குழந்தைகள் கயல்விழி, 4, லித்திகாஸ்ரீ, 3. குழந்தைகள் நான்கு பேரும் நேற்று காலை அவர்கள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, இரு வீட்டிலும் வீட்டு வாசலில் தெளிக்க, சாண பவுடரை நீரில் கலக்கி பக்கெட்டில் வைத்திருந்தனர். இதைப்பார்த்த குழந்தைகள், பார்க்க பச்சையாக இருந்ததால், குளிர்பானம் என எண்ணி குடித்தனர். இதில், மயங்கிய குழந்தைகளை பெற்றோர் மீட்டு திருப்பத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை