உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / ரயில் மோதி 7 எருமைகள் பலி மற்ற ரயில்கள் வழியில் நிறுத்தம்

ரயில் மோதி 7 எருமைகள் பலி மற்ற ரயில்கள் வழியில் நிறுத்தம்

திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே ரயில் மோதி ஏழு எருமைகள் பலியான நிலையில், அதன் உடல்கள் சக்கரத்தில் சிக்கியதால், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.சென்னையிலிருந்து ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஈரோடு நோக்கி சென்றது. திருப்பத்துார் - மவுகாரம்பட்டி ஸ்டேஷன்களுக்கு இடையே சு.பள்ளிப்பட்டு பகுதியில் ரயில் சென்றபோது, தண்டவாளத்தை கடக்க முயன்ற ஏழு எருமைகள் மீது மோதி, அவை பலியாகின. அவற்றின் உடல்கள் சக்கரத்தில் சிக்கியதால், ரயில் நிறுத்தப்பட்டது.திருப்பத்துார் ரயில்வே போலீசார் எருமைகளின் உடல்களை அப்புறப்படுத்தினர். ஏற்காடு எக்ஸ்பிரஸ் ரயில், 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு, நேற்று அதிகாலை, 4:55 மணிக்கு ஈரோடு நோக்கி சென்றது. ஜார்கண்ட் மாநிலம், தன்பாத் ரயில்வே ஸ்டேஷனிலிருந்து கேரள மாநிலம், ஆலப்புழா வரை செல்லும் தன்பாத் ரயில், தெலுங்கானா மாநிலம், ஐதராபாதிலிருந்து கேரளா செல்லும் திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் ஆகிய இரு ரயில்கள் அரை மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை