டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய குழந்தை பரிதாப பலி
திருப்பத்துார்:திருப்பத்துார் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த நயனசெருவு கிராமத்தை சேர்ந்தவர் பிரகாசம், 40; விவசாயி. இவரது மனைவி சங்கீதா, 35. இவர்களுக்கு திருமணமாகி, 10 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது. நேற்று காலை தன் விவசாய நிலத்தில் ஏர் உழ, பிரகாசம் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த டிராக்டரை இயக்கினார். டிராக்டரின் பின்னால், அவரது ஒன்றரை வயது குழந்தை கரண்ஷர்மா நின்றிருப்பதை கவனிக்காமல், குழந்தை சக்கரத்தில் சிக்கியது. குழந்தை சம்பவ இடத்திலேயே பலியானது. நாட்றம்பள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.