உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை சாவு

வாணியம்பாடி:தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த, 3 வயது பெண் குழந்தை உயிரிழந்தது. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புருஷோத்த மகுப்பத்தை சேர்ந்தவர் கோவிந்தசாமி, 34; தொழிலாளி. இவரது, 3 வயது பெண் குழந்தை சந்தியா. கோவிந்தசாமி வீட்டின் முன், 4 அடி ஆழ தண்ணீர் தொட்டி கட்டி வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 8:00 மணியளவில் சந்தியா, வீட்டின் முன் விளையாடியபோது, தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தார். குடும்பத்தினர் குழந்தையை மீட்டு, வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். வாணியம்பாடி தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை