உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / தி.மு.க., கவுன்சிலர் போக்சோவில் கைது

தி.மு.க., கவுன்சிலர் போக்சோவில் கைது

திருப்பத்துார்:சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தி.மு.க., கவுன்சிலரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த தில்லை நகரைச் சேர்ந்தவர் மகேந்திரன், 45; தி.மு.க.,வைச் சேர்ந்த இவர், ஜோலார்பேட்டை நகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர். இவர், தாய் கண்காணிப்பில் வளர்ந்து வரும், 14 வயது சிறுமிக்கு பாலியில் தொந்தரவு கொடுத்து, இதை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.சிறுமி தன் தாயிடம் கூறியதால், அதிர்ச்சியடைந்த அவரது தாய், திருப்பத்துார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மகேந்திரனை போக்சோவில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !