காத்திருப்பு பட்டியலில் டி.எஸ்.பி.,
திருப்பத்துார்:அண்ணா பல்கலை மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, திருப்பத்துாரில், டிச., 30ல் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது, போலீசாருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து, 160க்கும் மேற்பட்ட, அ.தி.மு.க.,வினர் கைது செய்யப்பட்டனர்.இந்நிலையில், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த, திருப்பத்துார் டி.எஸ்.பி., ஜெகநாதன் மற்றும் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி ஆகியோர் மறியல் செய்யும் வரை அவர்களுக்கு கால அவகாசம் கொடுத்ததாகவும், மேலும், முன்னெச்சரிக்கையாக மறியலுக்கு வரும்போதே அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததாலும், அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது.அதற்கு அவர்கள் அளித்த பதிலில் திருப்தி இல்லாததால், ஜெகநாதன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். திருப்பத்துார் டவுன் இன்ஸ்., ஜெயலட்சுமி ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.