மேலும் செய்திகள்
ஏலக்காய் விலை சரிவு: விவசாயிகள் கவலை
31-Jan-2025
திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையிலுள்ள முத்தனார் கிராமத்தை சேர்ந்தவர் காந்தம்மாள், 73. நேற்று காலை வீட்டிலிருந்து நீண்ட நேரமாக அவர் வெளியே வராததால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது, அந்த மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தது தெரிந்தது.ஏலகிரி மலை போலீசார் விசாரணையில், மூதாட்டி தனியாக வசிப்பதை அறிந்து நோட்டமிட்ட கொள்ளையர்கள், நேற்று முன்தினம் இரவு மூதாட்டி வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, காந்தம்மாளின் கழுத்தை அறுத்து கொலை செய்து, அவர் அணிந்திருந்த, 3 சவரன் நகை, வீட்டில் வைத்திருந்த, 35,000 ரூபாய், எல்.இ.டி., 'டிவி' ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றது தெரிந்தது.
31-Jan-2025