உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / பெண் அணியும் பர்தா உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்

பெண் அணியும் பர்தா உடையில் கொள்ளையடித்த ஆண் சிக்கினார்

ஆம்பூர்:ஆம்பூரில், பர்தா அணிந்து, பெண்ணிடம் 40 சவரன் நகைகளை கொள்ளையடித்தவரை, போலீசார் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் முகமது புறா தெருவை சேர்ந்தவர் முபாரக் பாஷா, 52. பேன்சி ஸ்டோர் உரிமையாளர். இவரது மனைவி சுல்தானா, 48. தம்பதிக்கு, 21 வயதில் மகள் உள்ளார். கடந்த, 31, முபாரக் பாஷா வழக்கம் போல பேன்சி ஸ்டோருக்கு சென்றார். அன்று மதியம், 12:30 மணிக்கு பர்தா எனும் பெண்கள் முழு உடலையும் மறைக்கும் உடை அணிந்த ஒருவர், அவரது வீட்டிற்கு சென்று, திருமண பத்திரிகை கொடுக்க வந்திருப்பதாக கூறி கதவைத் திறக்க வைத்தார். பின், சுல்தானா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டிலிருந்த, 40 சவரன் நகையை கொள்ளையடித்து தப்பினார். ஆம்பூர் போலீசார், அப்பகுதியிலுள்ள, 'சி.சி.டி.வி.,' கேமரா காட்சிகள் மூலமாக ஆம்பூர் பர்ணக்கார தெருவை சேர்ந்த தன்வீர் அகமது, 36, என்ற ஆண் என தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, 31 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ