உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / 50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்

50 நாட்டு வெடிகுண்டுகள் எடுத்து சென்றவர் சிக்கினார்

திருவண்ணாமலை:வாலாஜா அருகே, வன விலங்குகளை வேட்டையாட பைக்கில், 50 நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து சென்றவரை போலீசார் கைது செய்தனர். ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா டோல்கேட் வழியாக நாட்டு வெடிகுண்டு கடத்தப்படுவதாக, தமிழக வனம் மற்றும் வன உயிரின குற்றங்கள் கட்டுப்பாட்டு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று அதிகாலை அவ்வழியாக பைக்கில் வந்த, வாலாஜா நரிக்குறவர் காலனியை சேர்ந்த வெங்டேசன், 45, என்பவரை மடக்கி சோதனை செய்தனர். அவர், வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தப்படும், 50 நாட்டு வெடிகுண்டுகளை வைத்திருந்தது தெரிந்தது. வெடிகுண்டுகளை பறிமுதல் செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ