மேலும் செய்திகள்
சிறுமியிடம் சீண்டல்; 'போக்சோ' சட்டத்தில் கைது
30-Jul-2025
திருப்பத்துார்:திருப்பத்துார் அருகே, சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவரை, போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரை சேர்ந்த முதியவர் பத்மநாபன், 73. இவர், அதே பகுதியில், 13 வயது சிறுமியிடம் அடிக்கடி பேச்சு கொடுத்து வந்தார். இரு நாட்களுக்கு முன், சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அவரிடம் இருந்து சிறுமி தப்பினார். சிறுமியின் பெற்றோர் புகார்படி, வாணியம்பாடி மகளிர் போலீசார் விசாரித்து, தலைமறைவாக இருந்த பத்மநாபனை, நேற்று போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
30-Jul-2025