உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / வி.ஏ.ஓ.,வை இடமாற்றம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

வி.ஏ.ஓ.,வை இடமாற்றம் செய்ததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்

வாணியம்பாடி, வாணியம்பாடி அருகே புகாருக்கு ஆளான வி.ஏ.ஓ.,வை இடமாற்றம் செய்த, ஆர்.டி.ஓ.,வை கண்டித்து, வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால், வி.ஏ.ஓ., அலுவலகம் மூடப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டன. திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த நரசிங்கபுரம் வி.ஏ.ஓ.,வாக சற்குணம் என்பவர் உள்ளார். இவர், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான சான்றிதழ்களில் முறைகேடு செய்துள்ளதாக வந்த புகார் படி, வாணியம்பாடி ஆர்.டி.ஓ., அஜிதாபேகம் விசாரணை நடத்தினார். இதில், பட்டா உள்ளிட்ட, 40 வகையான சான்றிதழ்களில் முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது. அவரை இடமாற்றம் செய்து, ஆர்.டி.ஓ., அஜிதா பேகம் உத்தரவிட்டார். இதை கண்டித்து, வாணியம்பாடி ஆர்.டி.ஓ., அலுவலகம் முன்பு, கிராம நிர்வாக வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் சார்பில், நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதில், 50க்கும் மேற்பட்ட வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர். இதனால் நேற்று வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் பகுதியிலுள்ள வி.ஏ.ஓ.,க்கள் அலுவலகம் மூடப்பட்டு பணிகள் பாதிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ