உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது

மாணவி பாலியல் பலாத்காரம்; போக்சோவில் மாணவன் கைது

ஆம்பூர்: ஆம்பூரில், 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த, 16 வயது மாணவனை, போலீசார் போக்சோவில் கைது செய்தனர். திருப்பத்துார் மாவட் டம், ஆம்பூர் பைபாஸ் சாலையோரம் நாடோடிகளாக வாழ்ந்து வரும் குடும்பத்தை சேர்ந்த, 3ம் வகுப்பு படிக்கும், 8 வயது மாணவியிடம், அதே பகுதியை சேர்ந்த, 11ம் வகுப்பு படிக்கும், 16 வயதுடைய மாணவன், கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அவரது பெற்றோர் சிகிச்சைக்கு அழைத்து சென்றனர். அப்போது அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தெரியவந்தது. இது குறித்து, மாணவியின் பெற்றோர், ஆம்பூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார், 16 வயது மாணவனை போக்சோவில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி