உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / நிற்காமல் சென்ற பஸ்சை விரட்டி சென்று பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி சிறப்பிடம்

நிற்காமல் சென்ற பஸ்சை விரட்டி சென்று பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி சிறப்பிடம்

திருப்பத்துார், மே 10திருப்பத்துார் அருகே, நிற்காமல் சென்ற பஸ்சை விரட்டி சென்று பிடித்து, பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி, 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். திருப்பத்துார் மாவட்டம், ஆலங்காயம் அடுத்த கொத்தக்கோட்டை கிராமத்தை சேர்ந்த மாணவி சுஹாசினி. இவர், ஆலங்காயம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 படித்து வந்தார். தினமும் அரசு டவுன் பஸ்சில், பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த மார்ச் மாதம், 25ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு இறுதி தேர்வு நடந்தது. மாணவி சுஹாசினி, தேர்வு எழுத அரசு டவுன் பஸ்சில் செல்ல கொத்தக்கோட்டை பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தார்.டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் சென்ற நிலையில், பஸ்சை மாணவி விரட்டி சென்றார். பொதுமக்கள் கூச்சலிட்டதால், 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் பஸ்சை அதன் டிரைவர் நிறுத்தினார். இது குறித்து வீடியோ வைரலானதால், பஸ் டிரைவர் முனிராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தற்காலிக கண்டக்டர் அசோக்குமார் டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்நிலையில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவி சுஹாசினி, 437 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றார். மாணவிக்கு கிராம மக்கள் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ