உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பத்தூர் / இளம்பெண் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர் கைது

இளம்பெண் படத்தை ஆபாசமாக மார்பிங் செய்த வாலிபர் கைது

ஆலங்காயம்: திருப்பத்துார் மாவட்டம் ஆலங்காயத்தை அடுத்த பூங்குளம் முனியன் வட்டத்தை சேர்ந்தவர் விஜய், 22; அருகே உள்ள கிரா-மத்தை சேர்ந்த திருமணமான இளம்பெண்ணுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இது தெரிந்து வீட்டில் கண்டித்ததால் அப்பெண், விஜய்யிடம் பேசுவதை நிறுத்தி கொண்டார்.இரண்டு நாட்களுக்கு முன், இளம்பெண்ணின் தாயை சந்தித்து, மகளை தன்னுடன் அனுப்புமாறு கூறி ஆபாசமாக பேசியுள்ளார். இதற்கு இளம்பெண்ணின் தாய் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விஜய், இளம்பெண் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் செய்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதிர்ச்சி ய-டைந்த இளம்பெண்ணின் தாய் அளித்த புகாரின்படி, ஆலங்-காயம் போலீசார் விஜய்யை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை