ஏரியில் மூழ்கி தொழிலாளி பலி
திருப்பத்துார், திருப்பத்துார் அருகே, காளைகளுக்கு ஏரியில் நீச்சல் பழக கற்று கொடுத்தபோது, நீரில் மூழ்கி தொழிலாளி பலியானார். திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த கதவாளம் பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன், 45, கூலித்தொழிலாளி. இவர் வளர்த்து வரும், 2 காளை மாடுகளை, காளை விடும் விழாவில் பங்கேற்க வைப்பார். அக்காளைகளுக்கு நீச்சல் பழக்க, நேற்று மாலை, 3:00 மணியளவில், காரப்பட்டு கிராமத்திலுள்ள சின்ன ஏரியில் மாடுகளுக்கு நீச்சல் பழக கற்றுக்கொடுத்தார். அப்போது அவர், திடீரென ஏரியின் சேற்றில் சிக்கி, நீரில் மூழ்கி பலியானார். உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.