உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மக்காச்சோளத்துக்கு மாறும் விவசாயிகள்

மக்காச்சோளத்துக்கு மாறும் விவசாயிகள்

பல்லடம் : மக்காச்சோளத்துக்கு கட்டுபடியான கொள்முதல் விலை கிடைப்பதால், பல்லடம் விவசாயி கள் காய்கறி சாகுபடியை கைவிட்டு விட்டு, மக்காச்சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டுகின்றனர். பல்லடம், சுல்தான்பேட்டை, பொங்கலூர் பகுதிகளில் 4,000 கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன. கறிக்கோழிகளுக்கு உணவாக புரதச்சத்து நிறைந்த கோழித்தீவனங்கள் வழங்க ப்படுகின்றன. கோழித்தீவனம் தயாரிக்க முக்கிய மூலப்பொருளாக மக்காச்சோளம் உள்ளது. பல்லடம், சுல்தான்பேட்டை, குண்டடம் பகுதிகளில் 8,000 ஏக்கர் பரப்பளவுக்கு சாகுபடி செய்யப்படும் மக்காச்சோளம் மற்றும் கர்நாடகாவில் இருந்து வரும் மக்காச்சோளம், கறிக்கோழி பண்ணையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்களால் கொள்முதல் செய்யப்படுகிறது. கடந்த மூன்று மாதமாக, மக்காச்சோளம் கொள்முதல் விலை குவிண்டால் ரூ.1,100க்கு குறையாமல் உள்ளது. இவ்விலை கட்டுபடியானதாக உள்ளதால், பல்லடம், சுல்தான்பேட்டை வட்டார விவசாயிகள் காய்கறி பயிர் சாகுபடியை விட்டு விட்டு, மக்காச்சோளம் சாகுபடியில் தீவிரம் காட்டுகின்றனர். காய்கறி சாகுபடியில் அடிக்கடி களை எடுத்தல், உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் போன்ற பணிகள் அதிகம்; விவசாய தொழிலாளர்களும் அதிகம் தேவை. மக்காச்சோளம் சாகுபடிக்கு குறைவான உரம், குறைவான பராமரிப்பு, அறுவடை நேரத்தில் மட்டும் தொழிலாளர்கள் இருந்தால் போதும். இதுவே மக்காச்சோளம் மீது விவசாயிகள் ஆர்வம் கொள்வதற்கு மற்றொரு காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !