உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / திருப்பூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் 17 முதல்வர் மருந்தகங்கள்

திருப்பூர்; திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்கள், தனிநபர் மூலம், 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது. ஊத்துக்குளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைந்துள்ள முதல்வர் மருந்தகம் நேற்று திறக்கப்பட்டது.தமிழகம் முழுவதும் ஆயிரம் 'முதல்வர் மருந்தகங்களை' முதல்வர் ஸ்டாலின், காணொலி காட்சி வாயிலாக நேற்று திறந்துவைத்தார்.திருப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகத்தை, அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.எம்.பி., சுப்பராயன், கூட்டுறவு சங்க இணை பதிவாளர் பிரபு, திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.மருந்தகத்தை திறந்துவைத்து அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:திருப்பூர் மாவட்டத்தில் 13 கூட்டுறவு சங்கங்கள் மற்றும் நான்கு தொழில்முனைவோர் மூலம், 17 முதல்வர் மருந்தகங்கள் அமைக்கப்பட உள்ளது. தமிழ்நாடு மருந்து பணிகள் கழகம், தமிழ்நாடுநுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் மருந்துகள் கொள்முதல் செய்யப்படும்.கூட்டுறவு சங்கங்களுக்கு 2 லட்சம் ரூபாய் மானியத்தில், உள்கட்டமைப்பு வசதிக்காக ஒரு லட்சம் ரூபாய் தொகையாகவும்; மீதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மருந்துகள் வழங்கப்படும். தனிநபர் தொழில்முனைவோருக்கு, 3 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும்.மானிய தொகைக்குமேல் கூடுதலாக கடன் தேவைப்படும் பட்சத்தில், கூட்டுறவு வங்கிகளில் ஆன்லைனில் விண்ணப்பித்து, கடன் பெறலாம். ரூ.1 லட்சத்துக்கு மேல் எனில், அசையா சொத்து அடமான கடன் அடிப்படியில், 9 சதவீத வட்டி விகிதத்தில் கடன் பெறலாம்.இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை