உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோவை கோட்டத்தில் 2 சி.என்.ஜி., பஸ் இயக்கம்

கோவை கோட்டத்தில் 2 சி.என்.ஜி., பஸ் இயக்கம்

திருப்பூர்:சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் டீசலுக்கு மாற்றாக சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு, திரவ இயற்கை எரிவாயு எனப்படும் இயற்கை எரிவாயு வாயிலாக பஸ்களை இயக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தை தொடர்ந்து, மதுரை, சேலம், கும்பகோணம் போக்குவரத்து கழகங்களில் தலா இரண்டு வீதம், ஆறு சி.என்.ஜி., பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இரண்டு மாதங்களுக்கு மேலாக இயங்கும் இந்த பஸ்கள் வாயிலாக, டீசலுக்காக செலவிடப்படும் தொகை வெகுவாக குறைந்துள்ளது; மைலேஜூம் அதிகரித்துள்ளது.திருநெல்வேலி, விழுப்புரம், கோவையில் தலா, இரண்டு சி.என்.ஜி., பஸ்களை இயக்கத்துக்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர், புறநகரில் தலா ஒரு பஸ் ஆக., முதல் இயங்க உள்ளது.தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் கூறுகையில், 'தற்போது ஒரு லிட்டர் டீசலில், 5.2 கி.மீ., மைலேஜ் கிடைக்கிறது. தோராயமாக கி.மீ.,க்கு நான்கு ரூபாய் 13 சதவீதம் வரை மீதமாவதால், டீசல் பஸ்களை சி.என்.ஜி.,யாக மாற்றும் நடவடிக்கை மெல்ல துவங்கியுள்ளது. சோதனை அடிப்படையில் இயக்கப்படும் இந்த பஸ்கள் இயக்கம் வெற்றி பெறும் போது கூடுதலாக சி.என்.ஜி., பஸ் இயக்கத்துக்கு வரும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை