உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / 364 சிலைகள் விசர்ஜனம்

364 சிலைகள் விசர்ஜனம்

அனுப்பர்பாளையம்:குன்னத்துாரில் ஹிந்து முன்னணி சார்பில் - 11, இந்து மக்கள் கட்சி சார்பில் - 5, பொது மக்கள் சார்பில் - 24, என மொத்தம் 40 இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் நேற்று ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, கோபி பவானி வாய்க்காலில் விசர்ஜனம் செய்யப்பட்டது. முன்னதாக பொதுக்கூட்டம் நடந்தது.பொங்கலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. பொதுக்கூட்டத்துக்கு மாநில அமைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். பொங்கலுார், ஊதியூர், காமநாயக்கன்பாளையம், பல்லடம் பகுதியில் ஹிந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த, 56 சிலைகள் வாகனங்களில் கொண்டுவரப்பட்டு பொங்கலுார் பி.ஏ.பி., வாய்க்காலில் கரைக்கப்பட்டன.தாராபுரம், குண்டடம், அவிநாசிபாளையம், காங்கயம், ஊத்துக்குளி, குடிமங்கலம், திருப்பூர் உட்பட மாவட்டம் முழுவதும், 364 சிலைகள் அந்தந்த பகுதியில் விசர்ஜனம் ஊர்வலம் நடந்து, நீர் நிலைகளில் கரைக்கப்பட்டது.

இன்று 500 சிலைகள் விசர்ஜனம்

திருப்பூர் மாநகரம் மற்றும் தாராபுரம், உடுமலை, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி என, ஹிந்து முன்னணி, விஷ்வ ஹிந்து பரிஷத், சிவசேனா, பாரத் சேனா, ஹிந்து சாம்ராஜ்யம் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளின், 14 விசர்ஜன ஊர்வலம் நடக்கிறது. மொத்தம், 500 சிலைகள் நீர் நிலைகளில் கரைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

போலீஸ் பாதுகாப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டி திருப்பூரில் மாநகர போலீசார், பிற மாவட்ட போலீசார், பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி